சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!
யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
- பெரியார்
2
திருமண முறையானது காட்டுமிராண்டிக்காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!
இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழிய, பொதுநலத்துக்கு அல்லவே? புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும் பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்த்துக் காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.
அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப் படமாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான்; ஆனால், அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவேயாகும். ஆண்களும், பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல் , படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் பெண்டாட்டியாகி , தனிக்குடித்தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக்கொண்டு , பொதுநல உணர்ச்சி அற்றவர் களாகவே ஆகிவிடுகின்றார்கள்.

3
"கடவுள் ஆதி இல்லாதது, அர்த்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட, அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிக் கொண்டே போய், அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கின்றதாக எண்ணிக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதாகச் சொல்லிவிடுகிறார்கள். -[பெரியார், 30.01.1938]
4
பள்ளிக் கூடத்துக்கு வருபவனுக்கு அறிவு புகட்ட வேண்டும். கடவுளை வேண்டுமென்பவன் அவனுக்கு அதுபற்றிய அறிவுத் தெளிவு ஏற்பட்டு அதை அவன் ஏற்றுப் பின்பற்றி எடுத்துக் கொள்ளட்டும். அதை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அவன் பள்ளிக்கு வந்து நுழையும்போதே "கடவுள் வணக்கம்" என்றால், "கடவுள்" என்பதை என்னான்னு அவனுக்குத் தெரிந்தா நாம் அதைப் புகுத்துகிறோம்? நாம் பண்ணினா ரகளைக்கு வந்து விடுகிறான். முதலில் ஒருவனுக்குக் கடவுளைச் சொல்லிக் கொடுக்கிறான். அவன் வளர்ந்ததும் அதை அவன் இன்னொருவனுக்கு அப்படியே சொல்லிக் கொடுக்கிறான். எங்கே போய் மாறுதல் அடையும் இது? நமக்கு இதுவே போதுமா? இதுக்கு மேலே வளரவேண்டாமோ?
-[பெரியார் , 05.03.1969]
-[பெரியார் , 05.03.1969]
5
தோழர்களே! இன்று உலகத்திலேயே மிகக் காட்டுமிராண்டிகளான நிலையில் நாம் இருக்கின்றோம். இல்லை என்று ஒரு மனிதனாலும் கூற முடியாது. இதைப்பற்றி நாம் கவலைப்படுவதும் இல்லை. எப்படி கக்கூஸ் (மலக்கழிவு) எடுப்பவன் அதிலேயே பழகுவதால் அவனுக்கு மலத்தினுடைய நாற்றம் தெரியவில்லையோ அப்படி நாம் காட்டுமிராண்டித்தனத்திலேயே பழகி அதனுடைய இழிவு தெரியாமல் இருக்கிறோம். அதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. - [பெரியார், 11-05-1959]
6
நம் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் மாபெருங்கேடாய் இருந்துவரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப்புக் காட்சிகளாகும். இவை இசையைவிட கேடானவையாகும் என்பது என் கருத்து. நம் தமிழ்நாடு மானமுள்ள நாடாக, மானத்தில் கவலையுள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்திருக்குமானால் இந்த நாடகம், சினிமா முதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும். இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன்.
இசையினால் காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால் காது, கண் ஆகிய இரு கருவிகள் மூலம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்து
போகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும் இழிவும் உள்ள நாட்டுக்கும், மக்களுக்கும் இன்று கடவுள் பஜனையும், கடவுள் திருவிளையாடல் நடிப்பும்தானா விமோசனத்துக்கு வழியாய் இருக்க வேண்டும்?
- [பெரியார், தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு என்ற புத்தகத்தில் இருந்து. பக்கம் : 66

8
வசவுக்கார வரண்ட மூளைகளைப் பற்றி நமக்குத் துளிக்கூடக் கவலையில்லை. ஏனென்றால் புத்திசாலிகள் ஏதாவது சொன்னால் அதை நாம் காதில் வாங்கி உள்ளத்திலே நுழைந்து, அறிவால் அலசிப் பார்க்கலாம். சொல்லுகிற விஷயத்தின் தராதரத்தைப் பற்றி நினைக்காமல் ஆத்திரப்பட்டுத் திட்டுகிறவர்களுக்கும் புத்திக்கும் சம்பந்தமே இருக்க முடியாதல்லவா?
-[பெரியார், 22.05.1951]
-[பெரியார், 22.05.1951]
9
இவ்வளவு இழிநிலைக்குக் காரணம் தமிழனுக்குக் கட்டுப்பாடு கிடையாது. மான உணர்ச்சி கிடையாது. தமிழ் மந்திரிகளுக்கு இன உணர்ச்சி கிடையாது என்பதுதான். இதுவரையில் இருந்தது போதும். இனியும் நாம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் பார்ப்பானும் வட நாட்டுக்காரனும் நம் தலை மீது நடக்க ஆரம்பிப்பான். தமிழன் வாழ வேண்டுமானால் நாம் எல்லோரும்... ஒன்றுபட்டு நமது தமிழ் நாட்டை நாம் ஆளவேண்டும். - [பெரியார், 24-05-1959]
10
ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே, பெண்களை அடிமையாக்கவும், அடங்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும்.
காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டதால், அது எப்படி இழுத்துக் கொண்டு ஓடாமல் எதிர்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோலப் பெண்கள் காதில் மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்துக் கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்குக் காது போய்விடுமோ என்று தலை குனிந்து முதுகை அடிக்கக் காட்டத் தயாராயிருப்பதற்காகவே அது உதவுகிறது. அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்குத் தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனித்துப் போக மாட்டார்கள். நகை போய்விடும் என்று வீட்டோடு
காத்துக் கிடப்பார்கள்.
அதபோலவே கைகளிலும் பூட்டிவிட்டால் விலங்கு போட்டது போல் அடங்கிக் கிடப்பார்கள். விரைவாக நடக்க மாட்டார்கள். அதிலும் 16,18... மேலும் பார்க்க-முழச் சேலையைச் சுற்றிவிட்டால், இன்னமும் தொல்லையாய் நடக்க முடியாமல் "அன்ன நடை" நடந்து கொண்டு அடங்கிக் கிடப்பார்கள் என்கிற எண்ணமேயாகும்.
இந்தக் காரியம் இப்போது பெண்களுக்கே ஆசையாகித் தாங்களாகவே தொழுவில் மாட்டிக் கொள்வது போல மாட்டிக் கொண்டு இந்தக் காரியத்திற்காகப் புருஷனுக்கு நன்றியும் காட்டுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் இதில்
செலவழிக்கும் பணமானது வீண் தேக்கமான பணம் என்றே வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.
பெண்கள் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தையும் கவலையும் செலுத்துவதோடு பணச் செலவும் செய்கிறார்கள். எதற்காக இப்படிச் செய்து
கொள்ள வேண்டும். இது ஒரு அடிமை மனப்பான்மையல்லவா?

11
நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து
பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி,நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை.நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

13
பர்ஷியா என்னும் பராசீகத்தில் இருந்தவர்களே ஆதியில் பெரிதும் ஆரியர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவர்களுக்குள் இருகட்சிகள் இருந்ததாகக்
கூறப்படுகிறது. அதாவது ஒரே இனத்தவர்கள் எனினும் இங்குள்ள சைவர்கள், வைணவர்களைப் போல ஒரு சாரார் தேவர்கள் என்றும், மற்றவர் அசுரர்கள் என்றும்
அழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது, எனினும் சமய துறையில் மாறுபட்டிருந்தனர். தேவர்கள், வானம், தீ முதலிய வானம் பிரகாசம்
என்னும் பொருளைக் கொண்டு தனு என்ற தத்துவத்தின் மீது வழிபாடு கொண்டிருந்தனர். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட இயற்கை தத்துவத்தைக் கொண்டிருந்தனர். அசுர தத்துவம் என்பதாக இதைக் கூறினர். தேவர்களை வென்று
அங்கிருந்து விரட்டியடிக்க, மது, புலால், ஒழுக்கக் குறைவு, கொலைத் தொழில் முதலியன காரணமாக அசுரர்கள் தேவர்களை வெறுத்து விரட்டினர்.
விரட்டப்பட்டு ஓடியவர்கள், விரட்டியவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டு வெளியேறி, பல நாடுகளைச்
சுற்றிவிட்டு, இறுதியாக இந்தியா சிந்து நதிக்கரை வந்தடைந்து சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தம்மை விரட்டியவர்களை மேலும் தொடர்ந்து வசை
பாடலாயினர். இந்தியாவிலும் அவர்கள் கண்ட மனிதர்கள் அவர்களது நாட்டு "அசுரர்"களைப் போலவே உயர்ந்த தத்துவத்தினராக இருந்து இவர்களை வெறுக்கவே அவர்களையும் வைதது போல சபிக்கும் காரியத்தை இவர்கள் மீதும் செய்து வருகின்றனர். அந்த வசவே வேதமாயிற்று.

14
தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது.
இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
- [பெரியார், "பகுத்தறிவு" மலர் 1, இதழ் 9, 1935 ]

17
நான் சொல்லப் போவதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை; உங்கள் சிந்தனைக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய வேலையும் ஏதோ என்னால் ஆனதைச் செய்ய வேண்டுமென்பதே; எனக்குப் பணமோ, புகழோ தேவையில்லை; மனிதனாகப் பிறந்தவன் மக்கள் குறையை நிர்வத்திக்க வேண்டும்; அதற்காக நான் பாடுபடுகிறேன். உலக நாட்டிலே இல்லாத குறை நம் நாட்டிலேதான் இருக்கிறது. - [பெரியார்,10.11.1958
19
தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள். மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள். ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள். நாய்களால் காக்கப்படுகிறார்கள். கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோ ஜீவன்களால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை.
அப்படித்தான், மனித ஜீவனும், பல வழிகளில் பல காரணங்களால், வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான்.
தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு, எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன் தான் மற்ற ஜீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது.
- [திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில் 1945-மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரியாரின் சொற்பொழிவு - ‘குடிஅரசு’ 14.04.1945]

21
பசிவாரம், பஞ்சம் என்று உங்கள் காதுக்கு இனிமையாகக் கூறி, உண்டிப் பிச்சை எடுத்து, அதை எலெக்க்ஷன் (தேர்தல்) வாணம் விட்டு, உங்களையெல்லாம் புளுகி ஏமாற்றுகிறான். நீங்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? இவன்கள் (தி.மு.க) போய் என்ன சாதிக்க முடியும்?
இந்தக் கண்ணீர்த் துளி உங்களிடம் வந்து நாங்களும் திராவிடர் கழகத்தினர்தான்; முன்னேற்றம் அவ்வளவுதான் என்கிறார்களே! என்ன முன்னேற்றம்? நான் பார்ப்பானைச் சேர்க்கக் கூடாது என்றால் நீ அவனை உன் கட்சியில் சேர்த்துக் கொண்டாய்! தேர்தல் கூடாது என்று நான் கூறினால் நீ சட்டசபைக்கு நிற்கிறாய். இது சுதந்திரம் அல்ல, நடப்பது ஜனநாயகம் இல்லை என்று கூறினால் நீ இல்லை இது ஜனநாயகம்தான் என்று கூறி ஓட்டு கேட்கிறாய்? இதுதானா முன்னேற்றம்? கேவலம் சட்டசபைப் பதவிக்காக அண்ணாத்துரை 'முதலியார்' என்ற சாதியைப் போட்டுக் கொள்கிறாயே, இதற்குப் பெயர் முன்னேற்றமா?
-[பெரியார், 15-10-1959]
இந்தக் கண்ணீர்த்துளிக்குத்தான் (தி.மு.க) என்ன கொள்கை இருக்கின்றது? பொறுக்கித் தின்பதுதானே கொள்கை.
-[பெரியார்,16.07.1961]

22
உலகத்திலேயே ஓர் அருமையான நல்லநாடு நம்முடைய தமிழ்நாடு. ஏராளமான வசதிகள் படைத்த நாடு. ஏன் இந்தக் காலிப்பசங்கள், சோம்பேறிப் பசங்களிடம் சிக்கிக்கொண்டு நாம் அவஸ்தைப்படும்படி இருக்க வேண்டும்? இதை இந்த அக்கிரமமான ஆதிக்கத்தை ஒழிக்க ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு பாடுபட முன்வர வேண்டும். நான் சாவதற்குள் எப்படியும் இந்த நிலை மாறியே தீரவேண்டும். இந்த உறுதி ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். - [பெரியார் , 20.10.1958]
23
"கண்ணீர்த் துளியைப் பார். அவன் கொடி வழி தெரியும் அப்போ வெறும் தகரப் போகணியாயிருந்தவன் இப்போ எப்படி இருக்கான்?" - [தி.மு.க வை குறித்து பெரியார், 20.03.1959
24
"கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்" என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். "காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்" என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.
அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது? என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்? - "குடிஅரசு" - 1947

25
இன்று ஆகாய கப்பல்களும், கம்பியில்லா தந்தியும், ரேடியோவும் வந்து நம்மை அதிசயப்படுத்துகிற சமயத்தில், நாம் தேர் திருவிழாவும் கும்பாபிஷேகமும் செய்கிறோம். 20-மணி நேரத்தில் அமெரிக்கா போகிறான். ஆனால், நாம் கட்டை வண்டி கட்டிக் கொண்டு பிரயாணம் செய்கிறோம்.
இன்று நமக்கு இவற்றின் பேரால் அறிவு மட்டும் கெட்டுப் போவதில்லை. ஏராளமான பணமும் பாழ் செலவு செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் இந்த கடவுள்களால்
வரும்படி வருகிறதெனப் பாருங்கள். திருப்பதி கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 40-லட்சம் ரூபாய் வரும்படி இதையெல்லாம் அனுபவிப்பவர்கள் யார்? மதுரை
கோவிலுக்கு 7, 5-லட்ச ரூபாய் வரும்படி; இதையெல்லாம் யார் உண்டு கொழுக்கிறார்கள்? சிறீங்கத்துக்கு 10-லட்சம் ரூபாய் வரும்படி. இதையெல்லாம் யார் மோசடி செய்கிறார்கள்? இவை மக்களுடைய முன்னேற்றத்திற்கு
உபயோகப்படுத்தப்படுகிறதா? பின் எங்கே போகிறது? பாழும் மதில்களைக் கட்டுவதற்குச் செலவு செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் தொந்தி நிரம்புகிறது.
இந்தப் பாழாய்ப் போகும் பணத்தில் ஒரு பகுதியை மக்கள் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான ஸ்தாபனங்கள் ஏற்படுத்த, அறிவு ஊட்டும் அலுவலகங்களைச் செய்யும்படி
செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?

26
கூத்தாடிப் பணம் சம்பாதிப்பதும், ஓட்டுப் பெற்று பதவிக்குச் செல்வதும், தன் சுயநலத்திற்காக மக்களை மடையர்களாக ஆக்குவதே ஆகும்.
காங்கிரஸ், கண்ணீர்துளி ( தி.மு.க), சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் நோக்கம் என்ன? இவர்களின் வேலை என்ன? இலட்சியம் என்ன? "நீ எனக்கு ஓட்டுப்போடு! நான் போய் அதை கிழித்துவிடுகிறேன், முறுக்கிவிடுகிறேன்" என்று வருஷம் முழுவதும் சொல்லிக் கொண்டு ஓட்டு (தேர்தல்) நடக்கும் போது அறுவடைக்கு வந்து விடுவான்.
-[பெரியார், 31-08-1959]

27
பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலே நம்பிவிடக் கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ; மந்திர சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்."
(பெரியார் , ´குடிஅரசு´ 09.12.1928)
(பெரியார் , ´குடிஅரசு´ 09.12.1928)
28
"நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள் கூட இப்போது தேவையில்லை. நம் கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இல்லாமலிருந்தாலே போதும். மனித அறிவும், சமூதாயமும் நல்ல வண்ணம் வளர்ச்சியடையும்." (விடுதலை 24.07.1969)
29
இன்றைக்கு 200-ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்றபெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூறமுடியுமா?
கூறமுடியுமானால் அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஓர் ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றி யறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே!
- [குடிஅரசு, 08.05.1948]

30
இந்தியன் ஒருவன் மலங்கழிக்கவிருந்தால் தண்ணீர் விட்டு தேய்த்துக் கழுவதுதான் சுத்தமாகக் கருதப்படும். ஆனால் ஒர் வெள்ளைக்காரன் மேல்நாட்டில் மலங்கழித்தால், காகிதத்தை வைத்து துடைப்பதுதான் சுத்தமெனக் கருதப்படும். அவன் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்திக் கொள்வதற்குச் சிறிதும் இயலாது. காரணம் அவனுடைய தேசத்தின் சீதோஷ்ணம் மிகவும் குளிர்ச்சி. அதுவுமன்னியில் அவனுடைய உடை தண்ணீர் விட்டு
சுத்தப்படுத்துவதற்கு இடங்கொடுக்காத நிலையில் ஓர் தடையாகவுமிருக்கிறது.ஒவ்வொரு காரியமும் இடத்திற்குத் தகுந்தபடி, தேசவர்த்தமானத்திற்குத் தக்கபடி நடை நடைபெறுமேயல்லாமல் வேறல்ல.
அதைப்போலவே மதமும் கால, தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடிஏற்படுத்தப்பட்டது. அந்த மதம் இப்பொழுதுள்ள கால, தேச, வர்த்தமானத்திற்கு அவசியமா? அல்லது அதை சீர்திருத்த வேண்டுமாவென்பதை ஆராய்ந்து தக்கன செய்ய வேண்டுமெயல்லாது அது எங்கள் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. அதைஒன்றுஞ் செய்துவிடக் கூடாது என்று சொல்லுவது அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.
- (திருநெல்வேலி மாவட்டம் சுயமரியாதைத் தொண்டர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 27.07.1929- "திராவிடன்" இதழில் வெளியானது)

31
தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு
உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு
மலையாளி டி.எம். நாயர். அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன்
பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார்.
தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக
போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது
எங்கே போயிருந்தார்கள்?

32
ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன். – ["நான் யார்", 1973]
33
தேவர்களுக்கும் அசுர்களுக்கும் சண்டை என்கிறானே அது பித்தலாட்டம்.பார்ப்பனருக்கும் நம் திராவிட மக்களுக்கும் நடந்த சண்டையைத்தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்கிறான் இந்தச் சாதி ஏற்பாட்டை எதிர்த்தவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அப்படிக் கொன்று பார்ப்பனர்களைக் காப்பாற்றியவைகள்தான் அவதாரங்கள் என்பவைகள்.
ஓர் அரக்கன் வேதத்தைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் ஒளிந்து கொண்டான். அந்த அரக்கனைக் கொன்று வேதத்தை மீட்டுத் தந்தான் என்று எழுதியிருக்கிறான்.
வேதத்தை எப்படி தூக்கிக் கொண்டு போனான்? இன்று இருப்பதுபோல் தூக்கிப் போகக் கூடிய பொருளாக - ஒரு புத்தகமாக - அந்தக் காலத்தில் - வேதம் இருக்கவில்லை; ஒலி வடிவமாகத்தான் அதாவது மனப்பாடம் செய்துவைத்து
உச்சரிப்பதாகத்தான் இருந்தது. அதை எப்படித் தூக்கிக் கொண்டு போகமுடியும்? அப்படியே தூக்கிக் கொண்டு போய்க் கடலில் ஒளிந்து கொண்டான் என்றால் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியும்?
[14.10.1957-அன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு

34
தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பது தான் தருமம் என்று பார்ப்பான் மனு தருமத்தில் எழுதி வைத்திருக்கிறான்.
உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுகிறது. ஆகாயத்திலே சந்திரமண்டலம் வரையில் மனிதன் பறந்துச் சென்று வருகிறான். தந்தி பறக்குது. அமெரிக்காவிலே பேசினால் இங்கே கேட்குது. கேட்பது மட்டுமல்ல. பேசுகின்ற மனிதனையும் நாம் நேரே பார்க்கலாம் டெலிவிஷன் மூலம்!
இத்தகைய அதிசயங்களை எல்லாம் கண்டுப் பிடித்து ஆராய்ந்து முன்னேறும் போது நாம் என்னடாவென்றால் சுத்தக் காட்டு மிராண்டிகளாக மாட்டையும், கழுதையையும், குரங்கையும், கல்லையும், கடவுள் என்றும் அந்த சாமிக்கு கல்யாணம், எத்தனை பிள்ளை, அதற்கு இத்தனை பூசை செய்தால் மோட்சம் என்று ஆராயும் முட்டாள்தனமான காரியத்தில் உச்சநிலையில் இருக்கிறோம்.
குழவிக்கல் சாமி. அதற்கு தினம் ஆறு வேளை-12 வேளை சோறு. வருஷா வருஷம் கல்யாணம். இதுவும் பத்தாமல் வைப்பாட்டி வேறு. அதற்குக் கருமாதி வேறு! நகை, கோயில் இப்படி அனேகம் செய்கிறோம். இதைப் பற்றியெல்லாம் ஒருவராவது சிந்திப்பது இல்லை. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவை எவனும் உபயோகப்படுத்துவதே இல்லை.
(14-06-1962 அன்று வல்லம் படுகையில் நடைப்பெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 23-06-1962 , 24-06-1962 , 25-06-1962)

35
எவ்விதத்தில் வட நாட்டான் நம்மைவிட உயர்ந்தவன்? எதற்காக வடவனோடு நாம் வாழவேண்டும்? வடநாட்டில் இருந்து என்ன வந்து நம்மைக் காப்பாற்றுகிறது?
என்ன சாதனம் அவனால் ஏற்பட்டுள்ளது? வடநாட்டான் மார்வாடி எல்லாம் இங்கேவந்து சுரண்டிப் பிழைக்கிறானே ஒழிய அவனோடு இருப்பதால் நமக்கு என்ன இலாபம்?
நாம் இன்று வெளிநாட்டுக்குப் போய்ப் பிழைக்க முடியாது. அங்கே போனால் உதைக்கிறான். வெள்ளைக்காரன் நாடாக இருந்த போது இந்தத் தொல்லை கிடையாது.தொலைந்து போகட்டும். நம் வீட்டில் இருந்து பிழைக்கலாம் என்றால் நம் வீட்டுக் கதவையும் பிடுங்கிக் கொண்டு போய்விட்டானே? கண்ட நாயும் இங்கே வந்து பிழைக்கிறது? நமக்குப் பிழைப்பில்லை; காரணம் கேட்டால் நாமெல்லாம் பாரதமாதா புத்திரர்கள்! நமக்குள் பிரிவினை கூடாது என்கிறான்.
நல்ல வருமானம் வரும் எல்லா டிபார்ட்மெண்ட்டையும் (துறைகள்) அவன் எடுத்துக் கொண்டான். என்னடா செலவு என்றால் ரூ.200-கோடி பட்டாளத்திற்கு என்கிறான். எங்களுக்கு எதற்கு இவ்வளவு பட்டாளச் செலவு? எங்களுக்கு யார் எதிரி? அங்கே பாக்கிஸ்தான் முஸ்லிம் உன்னை உதைக்கிறான் என்பதற்காக எங்களிடம் வரி போட்டு அங்கே உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய். இதற்குநாங்கள் ஏன் சம்மதிக்க வேண்டும்?
- [22.09.1958 அன்று வாலஜாபேட்டை (ஆர்காடு) பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு]

36
பகுத்தறிவு என்று சொல்லுவதும்
மாறி மாறி வருவதாகும்.
இன்று நாம் எவை எவைகளை
அறிவுக்குப் பொருத்தமானவை என்று
எண்ணுகிறோமோ அவை அவை நாளைக்கு
மூடப் பழக்கங்கள் எனத் தள்ளப்படும்.
நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள்
என்று புகழப்படுபவர்கள்! சொன்னவற்றையே
ஒதுக்கி விடுவோம். அதுப்போல் தான்
நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட
ஒரு காலத்தில் "ராமசாமி என்ற மூடக்
கொள்கைக்காரன் இருந்தான்" என்று கூறலாம்.
அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி!
காலத்தின் சின்னம்.
பழைய காலத்தைச் சேர்ந்தவை
என்பதற்காக நாம் குறை கூறவில்லை.
அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி
என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும்.
சிக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை
உண்டாகக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்!"
அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்போது
மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்.
எனவே மாற்றம் இயற்கையானது.
அதைத் தடுக்க யாராலும் முடியாது.
எத்தகைய வைதீகமும் மாற்றத்திற்குள்ளாகி
தான் தீர வேண்டும்.

37
ஒரு முழக் குழக்கவில்லை ஒரு டன் எடையுள்ள தேர் மீது ஏற்றி வைத்து, ஆயிரம் பேரை விட்டு இழுக்கச் சொன்னால் 1-மணிக்கு அது 4-மைல் நகருவதே பெரும் கஷ்டம். போலீஸ்காரன் இடுப்பு பெல்டைக் கழற்றி வெளுத்து வாங்குவான்! மணிக்கு 800-மைல் பறக்கிற ஆகாயவிமான காலத்திலே நம்ம கடவுள் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் நம்மை விடக்காட்டுமிராண்டிகள் வேறு யார் இருக்க முடியும்? - [பெரியார், 25-03-1959
38
குழவிக்கல்லை வணங்காத நாட்டில் தான்...
பார்ப்பான், பறையன் இல்லாத நாட்டில்தான்...
ஆகாய விமானம், ரயில், மோட்டார், அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு கண்டுபிடித்தார்கள்.
இங்கு நாம் மேல் ஏழு, கீழ் ஏழு என்று 'லோகங்களை'க் கண்டு பிடித்ததைத்தவிர ஒரு குண்டூசியாவது செய்தோமா?
- [பெரியார், 02.04.1950]

39
தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது.
- [பெரியார், "பகுத்தறிவு" மலர் 1, 1935

40
உன் இலக்கியத்தையே பார்த்து கிட்டே இருந்தால் நீ என்றைக்கு ஆகாயத்திலே பறக்கப் போகிறே? பறக்கிறதுக்கு எங்கே இருக்கிறது சரக்கு உன் இலக்கியத்திலே? கண்ட சரக்கு என்னான்னா - சூரியன் அங்கே ஓடினான், இங்கே ஓடினான் - அவளுக்குப் பிள்ளை கொடுத்தான், இவளுக்குப் பிள்ளை கொடுத்தான் - அவன் ஏழு குதிரையிலே போகிறான் - இந்த மாதிரி கதைதானே உனக்குத் தெரியும். அதுதான் உனக்குத் தெரிந்த இலக்கியம். இதுதான் பள்ளியிலேயும் சொல்லித்தருகிறார்கள். இதைத்தான் விரிவாக இலக்கியத்திலேயே படிக்கிறாய்.
- [பெரியார் , 05.03.1969
- [பெரியார் , 05.03.1969
41
எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.
-[பெரியார், 27.8.1971,மணப்பாறையில் ஆற்றிய உரை

42
அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன்.பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள்.
இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள்.இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது
என்னிடமும் 2, 3 இருக்கிறது என்று சொன்னால்தான், தான் தப்பிக்க முடியும்என்ற நிலை இருக்கிறது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய்விட்டோம்.
-[பெரியார், திருச்சியில் 21-10-1956-ல் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.1956)]

43
பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு?
உன் இரத்தம் கொண்டவர் தமிழ்மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள். அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் பட்டதுண்டா?
-[பெரியார், 30.11.1957, எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவு]

44
சுதந்திரமாக இருந்து வந்த நாம், எவரும் அஞ்சுமாறு ஆட்சி செலுத்திய நாம், உலகிற்கே நாகரிகத்தைக் கற்பித்த நாம், இன்று நாடிழந்து, நகரிழந்து, மானமிழந்து, மதியிழந்து, ஆரியத்துக்கு அன்னியனுக்கும் அடிமையாய் இருந்து வருகிறோமென்றால் அது மிகையாகாது.
- [பெரியார், 06-01-1945
- [பெரியார், 06-01-1945
45
நீ (நேரு) பிறந்த நாடு என்பதற்காக அக்கிரமாகக் காஷ்மீர் வேண்டும்என்கிறாயே? நீ பிறந்த நாடு என்பதற்காக அக்கிரமாகப் படையெடுத்துப் போகிறாய்! காஷ்மீர் என்ன நேஷன்? (நாடு)? என்ன சம்பந்தம் உனக்கும் காஷ்மீருக்கும்? முக்கால்வாசி மக்கள் முஸ்லீம் என்று இருக்கும்போது அங்குபோய் கலகம் செய்கிறாய்!
நீ பிறந்தநாடு என்பதற்காக இவ்வளவு சண்டை செய்கிறாய்.நான் பிறந்த தமிழ்நாடு எனக்கு வேண்டும் என்று நான் கேட்கக்கூடாதா?
-[பெரியார், 30.11.1957, எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவு

46
தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண் மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
-[பெரியார்,18.11.1946
-[பெரியார்,18.11.1946
47
"மனிதன் தனிப்பட வாழும் காட்டுப் பிராணியாய் துஷ்டப் பிராணியாய் இல்லாமல் கூடி வாழ வேண்டிய சமுதாயப் பிராணியாய் இருப்பதால், சமூகத்துக்கு உழைக்க வேண்டியது மனிதக் கடமைகளில் முக்கியமானதாகும். சமுதாயத்துக்குத் தொண்டு செய்யாதவன் மிருகத்துக்குச் சமானமாவான். சுயநலம் ஜீவசுபாவமேயானாலும் சமுதாய நலம் மனித ஜீவனுக்கு அவசியமானதாகும்."
-[பெரியார், 21.12.1943]
-[பெரியார், 21.12.1943]
48
சட்டவரம்புக்கு உட்பட்ட முறைக் கிளர்ச்சி என்பதெல்லாம் ஒரு பயனுமில்லாத பேச்சு! Constitutional agitation என்பதன் மூலம் எவ்வித இலாபத்தையும் அடையவே முடியாது. சும்மா பொறுக்கித்தின்பவன், பொதுவாழ்வில் வேஷம் போட்டுத் திரிபவன் வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம்.
- [ பெரியார், 15.01.1959
- [ பெரியார், 15.01.1959
49
காந்தியாரும் செல்வாக்குள்ள சில வார்த்தைகளைச் சொல்லிவிடுவதால், அதாவது, சத்தியம், அஹிம்சை, நீதி, சமாதானம் என்ற வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலமும், அது கெட்டிக்காரத்தனமாய் விளம்பரம் செய்யப்படுவதன் மூலமும் இந்திய அரசியலில் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டதால் அவர் நடத்தையின் பயனாய் நாட்டில் அரசியல் துறையில் ஏற்படும் பொய் பித்தலாட்ட நாணயக் குறைவான காரியங்களுக்கும், ஏமாற்று வஞ்சகங்களுக்கும், அடிதடி, கொலை, கொள்கை, நாசவேலைகளுக்கும் மற்றும் அட்டூழியங்களுக்கும் சமாதானக் கேடான குழப்பங்களுக்கும் அவர் சிறிதும் சம்பந்தப்படாதவராய் பொறுப்பு ஏற்கப்பட வேண்டாவராய்த் தப்பித்துக் கொள்ளுகிறார்.
இதுபோலவே சில செல்வாக்குள்ள வேஷம், பதவி ஆகியவைகளாலும் தாங்கள் எவ்வளவு அயோக்கியத்தனம் அட்டூழியம் செய்தாலும் பல சாமியார்களும், குருமார்களும், பண்டார சன்னதிகளும், மடாதிபதிகளும், ஆச்சாரியார்களும், மதிக்கப்படத்தக்கவர்களாகவும், பூசிக்கப்படத்தக்கவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். -[பெரியார், 22.02.1947

50
"கடவுளைக் குற்றம் சொல்லுகின்றான் இவன்" என்று எவன் நினைக்கின்றானோ அவனை விட மடையன் எவனுமிருக்கமாட்டான்.
அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது, கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கின்றேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய, நானாகச் செய்கின்றேன் என்று நம்பக்கூடாதே. அப்படி நம்புவதே கடவுள் நம்பிக்கையற்ற செயல்தானே. -

51
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
- [பெரியார், 15-2-1973
- [பெரியார், 15-2-1973
52
உங்கள் அபிப்பிராயங்களையும், என்னிலும் உங்களிலும் மாறுபட்டவர்களுடையவர்களது அபிப்பிராயங்களையும், பொறுமையாய்க் கேட்டு எல்லாவற்றையும் நடு நிலையில் இருந்து யோசித்து உங்கள் புத்திக்கு எட்டிய முடிவுப்படி நடக்க முயலுங்கள். குற்றமிருப்பினும் அனுபவத்தில் சீக்கிரம் திருத்தமாகிவிடும்.
-[பெரியார்,07.09.1930,கேரளா சீர்திருத்த மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு

53
இந்தக் காலத்து இளைஞர்கள் மனம்
என்மீது வெறுப்புக் கொள்ளாது;
வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட,
நான் அதற்கு அஞ்சவில்லை.
இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்;
பாராட்டாவிட்டாலும்,
இன்று நான் சொன்னதைப் பின்பற்றி
வீரத்தோடு, மானவாழ்வு
வாழும் வழியில் இருப்பார்கள்.
சரியாகவோ, தப்பாகவோ,
நான் அதில் உறுதி கொண்டிருப்பதால்
எனக்கு எக்கேடு வருவதானாலும்,
மனக் குறையின்றி, நிறை மனதுடன்
அனுபவிப்பேன்-சாவேன்
என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”
(தந்தை பெரியார் தமிழர் தலைவர் - நூல், பக்கம்: 15)

54
தோழர்களே!
இயக்கப் பிரச்சாரத்துக்கு அடிப்படை உதவியாக இருப்பது நம் கழகப் புத்தகங்களைப் பரப்புவதுதான். பிரச்சாரத்துக்கு நூல்கள் முக்கிய காரணம் ஆகும். எனக்குப் பின்னாலே இப்படிப்பட்ட காரியம் நடக்குமா என்பது சந்தேகம். ஆகவே வாய்ப்பு உள்ள போதே எல்லாவற்றையும் வாங்கிப் படித்துப் பார்ப்பதுடன் பாதுகாக்கவும் வேண்டும்."
- [தோழர் பெரியார், 26.10.1960,பெரியார் களஞ்சியம், தொகுதி:14. பாகம்:8. பக்கம்:47

55
இப்போது தமிழன்
தன்னை இந்தியன் என்பதையும்,
இந்து என்பதையும்,
மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும்,
கூட்டுகளிலிருந்தும்
விடுபட்டு விலகுவதாலேயே
தன்னை ஒரு மனிதன் என்றும்,
ஞானத்துக்கும், வீரத்துக்கும்,
பகுத்தறிவுக்கும், மானத்துக்கும்
உரிமை உடையவன் என்றும்,
இவைகளுக்கு ஒரு காலத்தில்
உறைவிடமாக இருந்தவன் என்றும்
உணருவானாவான்.
இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு
விரோதமாகக் காணப்படுவதில்
ஆச்சரியமில்லை.
அவர்களது கூலிகளில் பலர்
இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல்
நடிப்பதில் அதிசயமில்லை.
ஆனாலும், அதைப்பற்றி
நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
-[பெரியார், "திராவிடர் ஆரியர் உண்மை" என்ற நூலில் இருந்து,பக்கம்:6

56
இந்த நாட்டில் ஆண்ட நம் மூவேந்தர்களோ, அவனுக்கு அடுத்து ஆண்ட முஸ்லிம்களோ, நாயக்கனோ, மராட்டியனோ, கடைசியாக ஆண்ட வெள்ளைக்காரனோ எவனும் பாடுபடவில்லை. அவன் அவன் தான் ஆண்டால் போதும். தனக்கு ஆபத்து இல்லாது இருந்தால் போதும் என்று எண்ணியே ஆண்டு இருக்கின்றனர்.
- [பெரியார், 04.02.1961
- [பெரியார், 04.02.1961
57
என்னுடைய நோக்கமெல்லாம் சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் அநாகரிகப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். பழங்கால அநாகரிகத்துக்கேற்றபடி புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் அழிந்து புதியதொரு சமுதாயத்தை உருவாக்கி அதனிடத்தில் மனிதப் பண்பும், பகுத்தறிவும் நாகரிகம் மிளிரச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். -[பெரியார், 09.01.1956
58
“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து?
கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?
-[ பெரியார், 15.12.1967, ‘விடுதலை’

59
சிலர் கம்ப இராமாயணத்தைத் கலையென்ற சாக்கைச் சொல்லி எரிக்கக் கூடாதென்கிறார்கள். அதை ஒரு கலையென்று இராமாயணம் பாடிய கம்பரே ஒப்புக்கொள்ளவில்லை.
"வையம் என்னை இகழவும்,
மாசெனக்கு யெய்தவும்
இது இயம்புவது யாதெனில்
பொய்யில் கேள்வி புலமையினோர்
புகல்தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே"
என்பதால், வெள்ளையாகச் சொல்லுகிறார். அப்படி இருக்க இதைக் கலையென்பது எவ்வளவு மதியீனமாகும்.
- [பெரியார்,´இளைஞர்களுக்கு அழைப்பு´ என்னும் நூலில் இருந்து - பக்கம்:10

60
முதல் தடவை என்னை மரியாதையாக விட்டார்கள். தீர்ப்பு எழுதும்போது "இந்தமனிதன் கிழவன் ஆனதால் இவனை ஜெயிலுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை.அவனுக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டால் போதும்" என்று கருதி ஜெயிலுக்கு (நீதிபதிகள்) அனுப்பாமல் விட்டு விட்டார்கள்.
ஆனால் நாளைக்கு அந்த அபராதம் போட்டும் எச்சரிக்கை செய்தும் விட்ட ஜட்ஜ் அவர்கள் இப்படிச் சொல்ல முடியாது. கேட்பார்களே நாலுபேர்! "இவன் நாளையோ, நாளை மறுதினமோ செத்துவிடுவான்" என்றாலும், நாளைக்கு விட்டு வைத்தால் இப்படித்தானே பேசுவான்? ஆகையால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று தானே கருதி தண்டிப்பார்?
ஆகையால் முன்னையைவிட இப்போது கொஞ்சம் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பேசுகிறேன். எனக்குத் தண்டனை அனுபவிக்க ஆசை இல்லை.எனக்கு இனிமேல் தண்டனையினால் பெருமையோ பதவியோ பெருந்தன்மையோ வேண்டியதில்லை. ஆனால் இந்த அக்கிரமத்தைத் தடுக்க வேறு மார்க்கம் (வழிமுறை) இல்லையே! ஆகையால் இந்தக் காரியத்தில் மன வேதனையோடு பிரவேசிக்கிறேன்; எப்படியோ வாய்ப்பு வாய்க்கட்டும்.
- [ பெரியார், 30.10.1960, சென்னை -திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த சொற்பொழிவு.

61
கோஷா(பர்தா) முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். "தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்ட வீட்டிற்குள் இருந்து பாருங்கள்" என்பதே.
முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பெண்கள் காலில் இடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். பிற மதங்களிலுள்ள ஊழல்களைப் பழிப்பதுடன் மட்டும் திருப்திபடக்கூடாது. தங்கள் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் களைந்தெறிய வேண்டும்.
- [பெரியார், 29.11.1947, "விடுதலை" இதழில் எழுதிய தலையங்கம்.

62
தமிழின் பெயரால் பிழைப்பு!
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்கமுடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், தமிழைக் காக்க வேண்டும்,தமிழுக்கு உழைப்பேன்,தமிழுக்காக உயிர் விடுவேன் என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது.
[பெரியார், 16.03.1967,"விடுதலை"

63
"மதம் இருக்க வேண்டியதுதான். சாட்சாத் இறைவனால் உண்டாக்கப்பெற்ற இந்துமதத்தின் மகத்துவமே மகத்துவம்! பார்ப்பனர்கள்தான் அவதார புருஷர்கள்,கடவுளுக்கு அடுத்தபடியான அம்சம் கொண்டவர்கள். இந்த உண்மைகளை நேற்று இரவுதான் என் கனவில் தோன்றி அம்பாள் கூறினாள்"
என்று ஒரு வார்த்தை கூறினால்போதும்! உடனே நான் 'மகாத்மா' ஆகக்கூடும்! மகாத்மாவென்ன ஈ.வெ.ராமசாமி தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம் என்று கூறுவர். என்னுடைய உருவப்படம் ஒவ்வொரு பார்ப்பனர் வீட்டின் முன்னிலைகளிலெல்லாம் தொங்கும். நிதம் நிதம் மலர் சூட்டி சாம்பிராணி புகைகாட்டி பால்பழம் வைத்து நைவேத்யம் செய்வார்கள். அரசாங்கமே நான் சொல்லியதைப் பார்த்து "விட்டது சனியன்" என்று நிம்மதியாக எந்தப் பித்தலாட்டத்தையும் இனிமேல் செய்யலாம் என்று திட்டமிடும்.
"ஒருவன்தான் பெரும் எதிரியாக இருந்தான்; இன்று முதல் விமோசனம் கிடைத்தது" என்றெண்ணி மகிழ்வர்.
- [பெரியார், 06.03.1955

64
நாங்கள் புதிய உலகத்தை உண்டு பண்ண விரும்புபவர்கள். நாங்கள் இதுவரை எவரும் எடுத்துச் சொல்லாத, எடுத்துச் சொல்லப் பயப்படுகின்ற புதிய விஷயங்களைச் (கருத்துகளை) சொல்லுபவர்கள். நீங்கள் எங்கள் புத்தகத்தையோ, பத்திரிகைகளையே படித்திருக்க மாட்டீர்கள். உங்களிடம் வரும் அரசியல்காரர்கள் எங்களைப் போன்று புரட்சிகரமான கருத்துகளை எடுத்துச் சொல்லமாட்டார்கள்.
மாறாக உங்களுக்கு எது சொன்னால் நீங்கள் ஏமாறுவீர்களோ - எது சொன்னால் உங்கள் காதுக்கு இனிக்குமோ - அதனைச் சொல்லி உங்கள் ஓட்டுகளைப் பெற வருவார்கள் - [பெரியார், 07.04.1961

65
சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு
இருப்பது தான் சுயமரியாதைக் கட்சியின் லட்சியமா? - என்று யோசித்துப்பாருங்கள்.
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாக பார்ப்பானை ஏற்றி வைப்பதும்,பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒருநாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநலமரியாதையேயாகும் - [பெரியார், 13.06.1949]

66
எனக்கு என்ன உள் கருத்து சுயநலம் இருக்க முடியும்? சொல்லுங்கள் பார்க்கலாம். பதவி வேண்டுமா? அல்லது பணம் சம்பாதிக்கத்தான் வேண்டுமா? என்னிடம், என் கழகத்தினிடம் இருக்கின்ற பணத்திற்கே எனக்குப் பிறகு எவனும் போட்டி போடாமல் இருக்க என்ன வகை செய்வது என்ற கவலை உள்ளவனாகவும் அதன் காரணமாகவே மனநோய் உடையவனாகவும் இருக்கின்றேன்.
அப்படித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் முடியாதா?நான்தான் பெரிய வியாபாரியாக இருந்து அவற்றை எல்லாம் விட்டு இப்படித் துறவிபோல் பொதுத் தொண்டுக்கு வந்தவனாயிற்றே?
-[பெரியார், 29.12.1960

67
முன்னோர் சொன்னார் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் காட்டுமிராண்டிகள். அறிவாளிகள் என்று சொல்ல வேண்டுமானால் முன்னோர்களைவிட இன்றைய அறிவாளிகள்தான் மேல். இன்றைய அறிவாளிகளைவிட நாளை வரப்போகும் அறிவாளிகள் இன்னும் மேலானவர்களாக இருப்பார்கள். நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்துக்கும், இன்றைக்கும் எவ்வளவோ மாறுதல் அடைந்து இருக்கின்றோம். 2000, 3000- ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் எப்படி இருந்து இருப்பார்கள்? அது காட்டுமிராண்டிக் காலம் அல்லவா? அந்தக் காலத்து அறிவாளிகள் மூளையில் உதித்தக் கருத்துகள் இன்றைய நிலைக்கு எப்படிப் பொருந்தும்?
-[பெரியார், 02.02.1961
-[பெரியார், 02.02.1961
68
உலகம் எல்லாம் விழிப்பு எய்தி விட்டது. தினம் தினம் அதிசய அற்புதங்களைக் கண்டும், அனுபவித்தும் வருகின்றோம். 3000-ஆண்டுகளாகக் கடவுள் இருக்கிறது என்றாலும், இந்த 3000- ஆண்டுகளில் கடவுள் இந்த அதிசயங்களில் ஒன்றைக் கூடக் கண்டுபிடிக்கவில்லை. இந்த மைக் - எலக்ட்ரிக் லைட்களை (மின் விளக்கு) மனிதன்தானே கண்டுபிடித்தான்?
கேட்டால் கூறுவார்கள். "எல்லாம் சும்மாவா! கடவுள் செயல்தான் - கடவுள்தான் மனிதன் மூலம் செய்தது" என்று! ஏன் இந்த 3000-ஆண்டில் அதைச் செய்தால் என்ன? இப்போது ஏன் என்று கேட்டால் நீ நாஸ்திகன் என்று கூறிவிடுவார்கள்.
-[பெரியார், 30.06.1961

69
மொழி சம்பந்தமாகவும்,
வரி சம்பந்தமாகவும்,
பொருளாதார உரிமை சம்பந்தமாகவும்,
வெளிநாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும்,
அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக் கொண்டு எந்த வகையிலும் மாற்ற முடியாத அளவுக்கு இரும்புக் கூட்டுப் பாதுகாப்பை இந்த சட்டத்தின் மூலம் பார்ப்பனர்களும், வட நாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் "அரசியல் சட்ட எரிப்பு" என்பதாகும்.
- [பெரியார் முகவுரை, ´விடுதலை´, 17.11.1957

70
இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பேச முடியுமா என்றான். கிறிஸ்தவனைப் பிடித்தேன். ஏன் அய்யா முகம்மதியனை மட்டும் விட்டு வைத்திருக்கிறாய் யென்றான். இது முடியட்டும்; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். பிறகு அதையும் தாக்கினேன். இதனாலே அவர்களும் பலனடைந்தார்கள்.
-[பெரியார், 14-07-1959]
-[பெரியார், 14-07-1959]
71
ஒரு மனிதன், தான் சாப்பிடும் ஆகாரத்தை மற்றொருவன் கண்ணாலே பார்த்து விட்ட மாத்திரத்திலேயே அந்த ஆகாரம் மற்றொரு மனிதனுக்குச் சாப்பிட முடியாதபடி தோஷம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிற ஒரு கூட்டத்தால் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் அம்மக்கள் கையில் சுந்திரத்தைக் கொடுத்தால் அந்தச் சுதந்திரம் மற்ற மக்களுக்கு எப்படிப் பயன்படும்? -[பெரியார், 25.01.1947
72
ஒருவன் உழைப்பில் ஒருவன்
நோகாமல் சாப்பிடுவது என்ற
தன்மை இருக்கின்றவரையிலும்...
ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு
மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும்,
மற்றொருவன் தினம் அய்ந்து வேளை
சாப்பிட்டுவிட்டுச் சாயுமான நாற்காலியில்
உட்கார்ந்துக் கொண்டு
வயிற்றைத் தடவிக்கொண்டிருக்கிறதும்
ஆகிய தன்மை இருக்கிறவரையிலும்..
ஒருவன் இடுப்புக்கு
வேட்டியில்லாமல் திண்டாடுவதும்,
மற்றொருவன் மூன்று வேட்டி
போட்டுக் கொண்டு
உல்லாசமாகத் திரிவதுமான
தன்மை இருக்கின்ற வரையிலும்...
பணக்காரர்களெல்லாம் தங்களது
செல்வம் முழுமையும் தங்களுடைய
சுக வாழ்வுககே ஏற்பட்டது என்று
கருதிக்கொண்டிருக்கின்ற தன்மை
இருக்கின்ற வரையிலும்...
சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்!

73
நான் பிறக்கும் பொழுதே பணக்காரன் வீட்டில் பிறந்தேன். நான் தொட்டதிதெல்லாம் பெரியவன் ஆனேன். மற்றவருக்குக் கொடுக்கின்ற தன்மையில் தான் இருந்தேனே தவிர வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. முனிசிபல் சேர்மனாக (நகராட்சித் தலைவராக) இருந்தேன். தாலுக்கா போர்டு (வட்டக் கழகத்) தலைவனாக இருந்தேன். தேவஸ்தானத்திற்கு அதிகாரியாக இருந்தேன். அப்பொழுதிருந்தே மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.
சட்டசபை முதலிய பதவிகளில் மனம் செல்லவில்லை. யாரும் செய்யாத முறையாக இருக்க வேண்டும் என்று நீண்ட நாளாக யோசித்துப் பார்த்து நிதானமாக, பக்க பலமாக கடவுள் சங்கதியில் கை வைத்தேன்.
எல்லோரும் காலத்திற்குத் தகுந்தபடி கூத்தடிக்கின்ற நிலையில் இருந்தால் இந்தக் காரியத்தை யார் செய்வது? இதில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி என் கடமையை நான் செய்து விட்டுப் போகிறேன். நீங்கள் நாளையே கேட்டு நாளன்றைக்கே இதைச் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
- 09.11.1959- அன்று வேலூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவில் இருந்து சில வரிகள்..... ('விடுதலை', 22.11.1959

741
தமிழ் நாட்டில் இருக்கிற மக்கள் மடையர்களாக அயோக்கியனாய் வருவதற்குக் காரணம் பார்ப்பன பத்திரிகைகள் தான். நம்முடைய வளர்ச்சியை எல்லாம் தடைப்படுத்தி வருவன பத்திரிகைகளும் அவற்றை நடத்தும் பார்ப்பனர்களுமேயாகும். எவ்வளவோ காரண காரியத்தோடு பேசுகிற இந்தக் கூட்டத்தைப் பற்றி எழுதமாட்டான்! இங்கே வந்திருக்கும் இவ்வளவு பெரிய
கூட்டத்தைப் பற்றி ஒரு வரி கூடப் போடமாட்டான்!
சங்கராச்சாரியாரும் ஒரு சந்தில் நான்கு பேரை அழைத்துப் பேசி; கொண்டிருந்தால் நான்கு கலம் (பத்தி) அய்ந்து கலம் எழுதுவான் அல்லது நம்மைச் சில காலிகள் தாக்கிப்பேசினால் அதை முதலில் பக்கத்தில் போட்டுப் பெருமையடைவான்! நம்மைத் திட்டுகிறவனும் சுகமாக திட்டுகிறான். பார்ப்பானிடம் கூலி வாங்கிக் கொண்டுதானே திட்டுகிறான்? அவன் பேச்சைப் போடும் போது நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் என்று எழுதுவான்! உள்ளே படித்துப் பார்த்தால் எங்கே விரலைவிட்டு ஆட்டினான் என்பது இருக்காது!
-[பெரியார்,11.08.1958]

75
ஆண்சாமி, பெண்சாமி, பெண்டாட்டிசாமி, தறுதலைச்சாமி, கல்லுச்சாமி, மண்ணுச்சாமி, கட்டைச்சாமி, செம்புச்சாமி, பொம்மைச்சாமி, வீட்டுச்சாமி, காட்டுச்சாமி, ஆற்றுச்சாமி, மயிலேறுஞ்சாமி, குயிலேறுஞ்சாமி, மாடேறுஞ்சாமி, ஆடேறுஞ்சாமி, எலியேறுஞ்சாமி, புலியேறுஞ்சாமி, கழுகேறுஞ்சாமி, குரங்கேறுஞ்சாமி, ஆனைமுகச்சாமி, ஆமைமுகச்சாமி, பன்றிமுகச்சாமி, பாம்புமுகச்சாமி, எலிமுகச்சாமி, புலிமுகச்சாமி, சிங்கமுகச்சாமி, சிறுத்தைமுகச்சாமி, கொல்லைப் பிடாரி, எல்லைப் பிடாரி, குழமாயி, குழந்தையாயி, அங்கம்மன், அங்காளம்மன், மூக்கம்மன், மூத்தாளம்மன், பொம்மியம்மன், வெள்ளையம்மன், ஜக்கம்மன், தீப்பம்மன், தீப்பாச்சியம்மன், சாமூண்டியம்மன், சரவேரியம்மன், வள்ளியம்மன், தெய்வானை, காமாஷி, விசாரலாட்சி, பேச்சியாயி, லட்சுமி, ஆண்டாள் முதலிய அம்மாமார்களும், சிவன், நாராயணன், பிரம்மன், முருகன், அய்யனார், ஆஞ்சிநேயர், காட்டான், மாடன், காட்டேரி, கருப்பண்ணன், முனீஸ்வரன், இருளன், பேயாண்டி, பெரியண்ணன், சின்னண்ணன், காத்தவராயன், மதுரைவீரன், வீரியன், நொண்டி, தூரி, தூண்டி, நல்லண்ணன், தொட்டியத்து சின்னான், மன்னாரு, பனைமரத்தான், நாட்ராயன் முதலிய அய்யாமார்களும், நமது நாட்டைவிட்டு என்று தொலைவார்களோ அன்றே நமது நாடு விடுதலையடையும் நிச்சயம். நிச்சயம்!
-[பெரியார், 23.06.1945, "குடிஅரசு"
-[பெரியார், 23.06.1945, "குடிஅரசு"
76
திதி என்றால் என்ன? மேல் உலகத்தில் இருப்பவர்களுக்கு இங்கிருந்து உணவு அனுப்புவதுதானே! சில மந்திரங்களைச் சொல்லி நம்மீது பூணூல் மாட்டி நம்மை மேல் சாதியாக்கிச் சடங்குகளைச் செய்வான். கடைசியில் மறுபடியும் பூணூலைக் கழற்றிக் கொண்டு தானே போகிறான்? இதன் தத்துவம் என்ன?
தமிழர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளவோ, திதி நடத்தவோ தகுதி கிடையாது என்பதுதானே?
இந்த மாதிரியாகப் பூணூலைப் போட்டுக் கொண்டு திருமணம் புரிந்ததாகவோ, திதி கொடுத்ததாகவோ தமிழர் இலக்கியத்தில் இருப்பதாகக் காட்ட முடியுமா?
- [பெரியார், 09.11.1959

77
"தமிழில் எழுதப்படும் புத்தகங்கள் தமிழ்ச் சொற்கள் கொண்ட புத்தகங்களாகவே இருக்க வேண்டும் என்பதே தமிழர் விருப்பம். பார்ப்பனர்களால் எழுதப்படும் புத்தகங்களில் தமிழ்ச் சொற்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. பார்ப்பனர்களில் ஒரு கூட்டம், வேண்டும் என்றே மடி கட்டிக் கொண்டு தமிழைச் சமஸ்கிருத மயமாக்க வேலை செய்து கொண்டிருக்கின்றது. சினிமா, பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாவற்றிலும் கூக்கூட்டம் தனது கைவரிசையை காட்டி வருகின்றது.
தமிழில் சமஸ்கிருதம் கலக்கக்கூடாது என்றால் இது சமஸ்கிருத வெறுப்பாகுமா? சமஸ்கிருத்தத்தில் தமிழைக் கலந்து எழுத வேண்டும் என்று கூறுகின்ற பார்ப்பனர் எவரேனும் உண்டா?"
- [பெரியார், ´விடுதலை´, 17-05-1941

78
நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2,000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல், அதில் உறைக்க வேண்டுமென்றால், சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள். உலகத்தையும் பாருங்கள், சிந்தியுங்கள், பரிகாரம் தேடுங்கள்! - [பெரியார், 1947, "குடிஅரசு
79
யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம் என்று சர்.ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வானதாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே எலி, கொசு,ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன.
மனித சமூதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவையெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா? என்று கேட்கிறோம்
-[பெரியார், 10.01.1947, "விடுதலை"யில் எழுதிய தலையங்கம்

80
1947-ஆகஸ்டு 15-ஆம் தேதி சுதந்திர நாள் என்றார்கள் நான்தான் துக்கநாள்; கேடு பயக்கும் நாள்; நமது பரம்பரை எதிரியான பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வரும் நாள் என்றேன்; ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமியற்றினார்கள்; வந்த உடனே மனுதர்ம சட்டம் இது என்றேன். இது பொய்யா? -[பெரியார், 14.09.1958
81
அரசியல் கட்சியாளர்கள் "இந்நாடு ஏழை நாடுதானே! உள்ளதைக் கொண்டுதானே வாழவேண்டும்" என்று கூறுகிறார்கள். யாருக்கு ஏழை நாடு? ஏழைநாடு என்றால் இந்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் ஏழை நாடாகத்தானே இருக்க வேண்டும்? அதன்றி ஒருவருக்கு ஏழை நாடாகவும் மற்றவர்க்குச் சகல சுகமும் அளிக்கும் இன்ப நாடாகவும் இருப்பதென்பது பித்தலாட்டம்தான்!
- [பெரியார், 06.03.1955
- [பெரியார், 06.03.1955
83
"இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும், இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், மனக் குறையின்றி, நிறை மனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்."
- [பெரியார், தமிழர் தலைவர் - நூல், பக்கம்:15

"நாட்டில் பள்ளிக் கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எத்தனை இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும், ஒரு கட்டுப்பாட்டுக்கு, ஒரு வரம்புக்கு, அடங்கியவை. இன்ன இன்னவைதான் சொல்லிக் கொடுக்க வேண்டும் இன்ன இன்னவைதான் பாடத் திட்டத்தில் இருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு.
இத்தகைய ஸ்தாபனங்களில் (நிறுவனங்களில்) படிப்பின் பயன் எல்லாமே ஏற்பட்டுவிடாது. இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவது இத்தகைய படிப்பகங்களே ஆகும். இங்கு எல்லாக் கருத்துகளையும் கொண்ட அறிவு நூல்கள், எல்லாக் கருத்துகளும் கொண்ட பத்திரிகைகள், எல்லா கருத்துக்களையும் கொண்ட உலகச் செய்திகள், பெரியவர் - அவர்களுடைய கருத்துகள் தாரளமாக இருக்கும்; அல்லது இருக்க வேண்டியது படிப்பகத்திற்கு மிகமிக அவசியமாகும் (கட்டாயத் தேவை ஆகும்.)
சுருங்கச் சொன்னால் படிப்பகங்களை ஒரு சர்வகலாசாலை (பல்கலைக் கழகம்) என்றே கூறலாம். இங்கு மக்கள் அதிகமாக வந்துப் படிக்கும்படிப் படிப்பகத்தார்கள் அக்கறை எடுத்துக் கொண்டு கவர்ச்சிகரமாக செய்ய வேண்டும். இப்படி இருக்குமானால் நம்முடைய காட்டுமிராண்டித்தனம், முரட்டுப் பிடிவாதம், தான்தான் உயர்வு என்கிற ஆணவம் இவை சீக்கிரம் மாற்றம் அடையும்."
- [பெரியார். - ´விடுதலை´, 08.01.1961]

84
"வெள்ளையன் ஒழிந்தது போல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா, இந்நாட்டை விட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின்,
எதற்காக ஒரு "இமயமலைப் பார்ப்பான்" – ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள்
இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ்
நாட்டில்....
எதற்காக இந்நாட்டை வட நாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்து விட்டு, இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக் கூடாதா?"
-[பெரியார் - "விடுதலை', 19.10.1948]

85
"அரசன் ஏன்?
உயர்ந்த ஜாதி ஏன்?
தாழ்ந்த ஜாதி ஏன்?
கடவுள் ஏன்?
மதம் ஏன்?
என்று சொல்லுவது போலவே,
இப்போது
பணக்காரன் ஏன்?
பிரபு ஏன்?
முதலாளி ஏன்?
ஏழை ஏன்?
அடிமை ஏன்?
என்று கேட்கிறோம்.
இந்தப்படி ஏன் கேட்கிறோம்?
முதல் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலடையத் துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு, காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும் அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தாமாகவே கொண்டு போகின்றன."
- பெரியார்
சிறுகுறிப்பு : {மேற்கோள் காட்டப்பட்டுள்ள சிந்தனை 13.06.1949 ஆம் நாள் 'விடுதலை'யில் வெளிவந்த கட்டுரை. 'புரட்சி' என்ற பெயரில் சிறு நூலாக 1962-இல் வெளியிடப்பட்டது. இந்நூல் முழுவதையும் வாசிக்க :

86
நான் விநாயகர் உருவத்தை உடைக்கச் சொல்லியபோது என் உருவத்தை இழுத்துச் சென்று செருப்பாலடித்ததாகக் கூறினார்கள். அதைப் பற்றி நான் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அது என் சொந்த விஷயங்களுக்கு அடிக்கவில்லையே! பொது நலத்திற்கு என்று செய்த வேலைக்குத்தானே என் உருவம் அடிக்கப்பட்டது?
-[பெரியார், 11.04.1954
-[பெரியார், 11.04.1954
87
"நல்லநாள், கெட்டநாள், பண்டிகை கொண்டாடுவதெல்லாம் எதற்காக? மதத்தாலே ஏற்பட்ட சாதியை புராணத்தால் புகுத்தப்பட்ட சாதியை ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் கொண்டு வருவதற்குத் தனித்தனியாகப் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், மூலம் பிரசாரம் செய்வதே தவிர, அதனால் எந்தவிதப் பலனும் இருப்பதாகக் கூறமுடியுமா?"
88
இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பது பிராமணீயம்!
இந்தியாவை வேற்றரசர் கையில் கொடுத்தது பிராமணீயம்!
இந்து முஸ்லீம் கலகங்களை மூட்டுவது பிராமணீயம்!
தமிழரை வறுமைக்குள்ளாக்கியது பிராமணீயம்!
இந்தியா சுயராஜ்யம் அடைவதற்குத் தடைக்கல்லாயிருப்பது பிராமணீயம்!உடன்பிறந்த சகோதரர்களான தமிழர்கள் அடித்துக் கொள்ளவும், நீதிமன்றமேறி வழக்காடவும் காரண பூதமாயிருப்பது பிராமணீயமே!
தமிழர்களே! இந்தப் பாழான பிராமணீயத்தை நாட்டை விட்டு ஓட்டுக.
- பெரியார், ['குடிஅரசு', 15.08.1926]

89
இந்தத் தெளிவான காலத்திலும் இவ்வளவு இழிவை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இழிவான காலத்திலும் நமக்குப் புத்தி வரவில்லையானால் இனி எப்பொழுதுதான் நமக்குப் புத்தி வரப்போகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
பார்ப்பனர்களைக் குறை சொல்லிச் சொல்லி வாயும் சலித்துப் போய்விட்டது. எழுதி எழுதி கையும் சலித்துப் போய்விட்டது. ஆனால் நம்மக்களுக்குப் புத்தியோ மானமோதான் சிறிது கூட ஏற்பட்டதாகச் சொல்லுவதற்கில்லை.
-[பெரியார், 07-06-1943]

90
வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெறியேற்றப்பட்டான்?
தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ்டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள்தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்றுவதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே தீரவேண்டும்?
ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்டவாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும் யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத்தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும்.
-[பெரியார், 15.11.1953

91
'பறையர்' என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால் தான் 'சூத்திரர்' என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டில் இருக்கிறது. 'பறையர்' என்கிற சாதிப் பெயரைவிட 'சூத்திரர்' என்கிற சாதிப்பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரிகளில் பதிவிரதைகளுக்கும் - சரியான ஒரு தாய்க்கும், தகப்பனுக்கும்-பிறந்தவர்களும் இருக்கலாம். 'சூத்திரர்களில் அப்படி இருக்க இடமில்லை. ஏனென்றால், சூத்திரச்சி என்றால் தாசி, வேசி மகள் என்பதுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால், என் போன்ற 'சூத்திரன்' என்று சொல்லப்படுபவன், 'பறையர்கள்' என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாக சொல்லுவதெல்லாம், 'சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத்தானேயல்லாமல், வேறல்ல. ஆகையால் எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காக பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாகக் கருதும் பெண்களும், ஆண்களும், தாங்கள் பிறரால் உங்களை விடக் கேவலமாய்-தாழ்மையாய்க் கருதப்படுவதை அறிவதில்லை.
(சிராவயலில் 07.04.1926 அன்று பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவில் சில வரிகள்)

92
திருமணம் புரிந்தவுடன் சுமார் அய்ந்து வருடங்கள் வரை குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி இருந்தால்தான் தேகம் சுகமாக இருக்கும். சிலர் திருமணம் முடிந்தவுடன் அய்ப்பசியில் திருமணமானால் மறு புரட்டாசியில் குழந்தை பிறந்துவிடுகிறது. பிறகு மனைவி குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதா? கணவன்தான் ஆகட்டும் மனைவியிடம் கொஞ்சுவானா? குழந்தையிடமா?
94
தோழர்களே!
எங்கள் தொண்டு சமுதாயத் தொண்டாகும். அரசியல்காரர்கள் அல்ல நாங்கள். மக்கள் - சமுதாயத்தில் அறிவுடையவர்களாக ஒழுக்கம் உடையவர்களாக இருந்தால் தான் ஆட்சி நன்றாக நடைபெறும். ஆகவே நாங்கள் அரசியல் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயத் தொண்டு ஆற்றுகிறோம். அரசியலில் ஈடுபடும் மக்களின் அறிவு வளர வேண்டும். அரசியல் பற்றிப் பேசுவது தும்மை விட்டு விட்டு வாலை; பிடித்து உதைவாங்கவது மாதிரி மக்கள் நல்லறிவு பெறவேண்டும் விழிப்படைய வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.
நாங்கள் அரசியலில் ஈடுபட்டுச் சட்டசபைக்கோ பார்லிமெண்டுக்கோ நின்று உங்களிடம் ஓட்டுக்கு வருபவர்கள் அல்லர். மந்திரிப் (அமைச்சர்) பதவிக்கு ஆசைப்பட்டு காரியம் ஆற்றுபவர்கள் அல்லர்.
மக்கள் மடமையை - அதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபடுபவர்கள்.

95
சமுதாய நலம் கொண்ட மக்கள் சமூகம்தான் முற்போக்கும் மேன்மையும் அடைகிறது.
நம் நாட்டில் பார்ப்பனருக்கும் முஸ்லீம்களுக்கும் தான் அவரவர்கள் சமுதாய நலத்தில் கவலையும் கடமையாய்க் கருதும் தன்மையும் இருந்து வருகிறது. நம் திராவிட சமுதாயத்திலோ ஆதிதிராவிட சமுதாயத்திலோ அவை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவ்விரு கூட்டத்தாருக்கும் தங்கள் சமுதாயம் எப்படிப்பட்டது? எது? என்பதே தெரியாமல் போய்விட்டது. ஆதிதிராவிடர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் தங்கள் இனத்திலேயே ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாத, சம்பந்தமில்லாத பல ஜாதிகளாகப் பிரிந்து போய்விட்டார்கள். திராவிடர்கள் என்பவர்களும் தங்களில் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாத, ஒருவரை ஒருவர் தொடாத கொடுக்கல் வாங்கல் இல்லாத அநேக ஜாதிகளாய்ப் போய்விட்டார்கள். இவர்களுக்கு மதம் (அதாவது ஒரு கொள்கை) இல்லை. ஜாதி (இன உணர்ச்சி) இல்லை. மதமோ ஜாதியோ இல்லாத மக்கள் அதாவது சமுதாயக்கூட்டுக் கொள்கையோ இனப்பற்றோ இல்லாத மக்கள் மிருக பிராயத்திலோ காட்டுமிராண்டித் தன்மையிலோ பட்டவர்களாவார்கள். இதனால்தான் நாம் நம்மைப் பார்ப்பனரல்லாதவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறோமே ஒழிய, தமிழர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறோம்.

96
உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.
எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய, நிர்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதனுடன், அடிமைக் கற்பையும், நிர்ப்பந்தக் கற்பையும் தான் காணலாம். அன்றியும், இம்மாதியான கொடுமையைவிட வெறுக்கத்தக் காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது.

97
பெண் உரிமை
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
அன்றியும், மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் நமது தோழர் குறிப்பிட்ட இருபாலார் குணங்களும் சமமாய் இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும். இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது. ஆனால், அது செயற்கையால் - ஆண்களின் சுயநலத்தால் - சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.

98
இந்தக் காதலென்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், "காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல" என்றும், "அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு" என்றும், "அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்" என்றும், "அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும்,
"அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்" என்றும், அந்தப்படி "ஒருவரிடம் ஒருவருக்குமாக - இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது" என்றும், "பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டு விட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது" என்றும், மற்றும் "ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ ஏற்படாது" என்றும் சொல்லப்படுகின்றன.
மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானமுமில்லாதவர்களென்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும், அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டியிருக்கின்றது.

Subscribe to:
Posts (Atom)