நீ (நேரு) பிறந்த நாடு என்பதற்காக அக்கிரமாகக் காஷ்மீர் வேண்டும்என்கிறாயே? நீ பிறந்த நாடு என்பதற்காக அக்கிரமாகப் படையெடுத்துப் போகிறாய்! காஷ்மீர் என்ன நேஷன்? (நாடு)? என்ன சம்பந்தம் உனக்கும் காஷ்மீருக்கும்? முக்கால்வாசி மக்கள் முஸ்லீம் என்று இருக்கும்போது அங்குபோய் கலகம் செய்கிறாய்!
நீ பிறந்தநாடு என்பதற்காக இவ்வளவு சண்டை செய்கிறாய்.நான் பிறந்த தமிழ்நாடு எனக்கு வேண்டும் என்று நான் கேட்கக்கூடாதா?
-[பெரியார், 30.11.1957, எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவு