66

எனக்கு என்ன உள் கருத்து சுயநலம் இருக்க முடியும்? சொல்லுங்கள் பார்க்கலாம். பதவி வேண்டுமா? அல்லது பணம் சம்பாதிக்கத்தான் வேண்டுமா? என்னிடம், என் கழகத்தினிடம் இருக்கின்ற பணத்திற்கே எனக்குப் பிறகு எவனும் போட்டி போடாமல் இருக்க என்ன வகை செய்வது என்ற கவலை உள்ளவனாகவும் அதன் காரணமாகவே மனநோய் உடையவனாகவும் இருக்கின்றேன்.

அப்படித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் முடியாதா?நான்தான் பெரிய வியாபாரியாக இருந்து அவற்றை எல்லாம் விட்டு இப்படித் துறவிபோல் பொதுத் தொண்டுக்கு வந்தவனாயிற்றே?

-[பெரியார், 29.12.1960