64

நாங்கள் புதிய உலகத்தை உண்டு பண்ண விரும்புபவர்கள். நாங்கள் இதுவரை எவரும் எடுத்துச் சொல்லாத, எடுத்துச் சொல்லப் பயப்படுகின்ற புதிய விஷயங்களைச் (கருத்துகளை) சொல்லுபவர்கள். நீங்கள் எங்கள் புத்தகத்தையோ, பத்திரிகைகளையே படித்திருக்க மாட்டீர்கள். உங்களிடம் வரும் அரசியல்காரர்கள் எங்களைப் போன்று புரட்சிகரமான கருத்துகளை எடுத்துச் சொல்லமாட்டார்கள்.

மாறாக உங்களுக்கு எது சொன்னால் நீங்கள் ஏமாறுவீர்களோ - எது சொன்னால் உங்கள் காதுக்கு இனிக்குமோ - அதனைச் சொல்லி உங்கள் ஓட்டுகளைப் பெற வருவார்கள் - [பெரியார், 07.04.1961