நான் பிறக்கும் பொழுதே பணக்காரன் வீட்டில் பிறந்தேன். நான் தொட்டதிதெல்லாம் பெரியவன் ஆனேன். மற்றவருக்குக் கொடுக்கின்ற தன்மையில் தான் இருந்தேனே தவிர வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. முனிசிபல் சேர்மனாக (நகராட்சித் தலைவராக) இருந்தேன். தாலுக்கா போர்டு (வட்டக் கழகத்) தலைவனாக இருந்தேன். தேவஸ்தானத்திற்கு அதிகாரியாக இருந்தேன். அப்பொழுதிருந்தே மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.
சட்டசபை முதலிய பதவிகளில் மனம் செல்லவில்லை. யாரும் செய்யாத முறையாக இருக்க வேண்டும் என்று நீண்ட நாளாக யோசித்துப் பார்த்து நிதானமாக, பக்க பலமாக கடவுள் சங்கதியில் கை வைத்தேன்.
எல்லோரும் காலத்திற்குத் தகுந்தபடி கூத்தடிக்கின்ற நிலையில் இருந்தால் இந்தக் காரியத்தை யார் செய்வது? இதில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி என் கடமையை நான் செய்து விட்டுப் போகிறேன். நீங்கள் நாளையே கேட்டு நாளன்றைக்கே இதைச் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
- 09.11.1959- அன்று வேலூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவில் இருந்து சில வரிகள்..... ('விடுதலை', 22.11.1959