72

ஒருவன் உழைப்பில் ஒருவன்
நோகாமல் சாப்பிடுவது என்ற
தன்மை இருக்கின்றவரையிலும்...

ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு
மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும்,
மற்றொருவன் தினம் அய்ந்து வேளை
சாப்பிட்டுவிட்டுச் சாயுமான நாற்காலியில்
உட்கார்ந்துக் கொண்டு
வயிற்றைத் தடவிக்கொண்டிருக்கிறதும்
ஆகிய தன்மை இருக்கிறவரையிலும்..

ஒருவன் இடுப்புக்கு
வேட்டியில்லாமல் திண்டாடுவதும்,
மற்றொருவன் மூன்று வேட்டி
போட்டுக் கொண்டு
உல்லாசமாகத் திரிவதுமான
தன்மை இருக்கின்ற வரையிலும்...

பணக்காரர்களெல்லாம் தங்களது
செல்வம் முழுமையும் தங்களுடைய
சுக வாழ்வுககே ஏற்பட்டது என்று
கருதிக்கொண்டிருக்கின்ற தன்மை
இருக்கின்ற வரையிலும்...

சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்!