33

தேவர்களுக்கும் அசுர்களுக்கும் சண்டை என்கிறானே அது பித்தலாட்டம்.பார்ப்பனருக்கும் நம் திராவிட மக்களுக்கும் நடந்த சண்டையைத்தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்கிறான் இந்தச் சாதி ஏற்பாட்டை எதிர்த்தவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அப்படிக் கொன்று பார்ப்பனர்களைக் காப்பாற்றியவைகள்தான் அவதாரங்கள் என்பவைகள்.

ஓர் அரக்கன் வேதத்தைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் ஒளிந்து கொண்டான். அந்த அரக்கனைக் கொன்று வேதத்தை மீட்டுத் தந்தான் என்று எழுதியிருக்கிறான்.
வேதத்தை எப்படி தூக்கிக் கொண்டு போனான்? இன்று இருப்பதுபோல் தூக்கிப் போகக் கூடிய பொருளாக - ஒரு புத்தகமாக - அந்தக் காலத்தில் - வேதம் இருக்கவில்லை; ஒலி வடிவமாகத்தான் அதாவது மனப்பாடம் செய்துவைத்து
உச்சரிப்பதாகத்தான் இருந்தது. அதை எப்படித் தூக்கிக் கொண்டு போகமுடியும்? அப்படியே தூக்கிக் கொண்டு போய்க் கடலில் ஒளிந்து கொண்டான் என்றால் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியும்?

[14.10.1957-அன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு