சிலர் கம்ப இராமாயணத்தைத் கலையென்ற சாக்கைச் சொல்லி எரிக்கக் கூடாதென்கிறார்கள். அதை ஒரு கலையென்று இராமாயணம் பாடிய கம்பரே ஒப்புக்கொள்ளவில்லை.
"வையம் என்னை இகழவும்,
மாசெனக்கு யெய்தவும்
இது இயம்புவது யாதெனில்
பொய்யில் கேள்வி புலமையினோர்
புகல்தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே"
என்பதால், வெள்ளையாகச் சொல்லுகிறார். அப்படி இருக்க இதைக் கலையென்பது எவ்வளவு மதியீனமாகும்.
- [பெரியார்,´இளைஞர்களுக்கு அழைப்பு´ என்னும் நூலில் இருந்து - பக்கம்:10