கோஷா(பர்தா) முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். "தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்ட வீட்டிற்குள் இருந்து பாருங்கள்" என்பதே.
முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பெண்கள் காலில் இடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். பிற மதங்களிலுள்ள ஊழல்களைப் பழிப்பதுடன் மட்டும் திருப்திபடக்கூடாது. தங்கள் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் களைந்தெறிய வேண்டும்.
- [பெரியார், 29.11.1947, "விடுதலை" இதழில் எழுதிய தலையங்கம்.