"மனிதன் தனிப்பட வாழும் காட்டுப் பிராணியாய் துஷ்டப் பிராணியாய் இல்லாமல் கூடி வாழ வேண்டிய சமுதாயப் பிராணியாய் இருப்பதால், சமூகத்துக்கு உழைக்க வேண்டியது மனிதக் கடமைகளில் முக்கியமானதாகும். சமுதாயத்துக்குத் தொண்டு செய்யாதவன் மிருகத்துக்குச் சமானமாவான். சுயநலம் ஜீவசுபாவமேயானாலும் சமுதாய நலம் மனித ஜீவனுக்கு அவசியமானதாகும்."
-[பெரியார், 21.12.1943]