தோழர்களே!
எங்கள் தொண்டு சமுதாயத் தொண்டாகும். அரசியல்காரர்கள் அல்ல நாங்கள். மக்கள் - சமுதாயத்தில் அறிவுடையவர்களாக ஒழுக்கம் உடையவர்களாக இருந்தால் தான் ஆட்சி நன்றாக நடைபெறும். ஆகவே நாங்கள் அரசியல் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயத் தொண்டு ஆற்றுகிறோம். அரசியலில் ஈடுபடும் மக்களின் அறிவு வளர வேண்டும். அரசியல் பற்றிப் பேசுவது தும்மை விட்டு விட்டு வாலை; பிடித்து உதைவாங்கவது மாதிரி மக்கள் நல்லறிவு பெறவேண்டும் விழிப்படைய வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.
நாங்கள் அரசியலில் ஈடுபட்டுச் சட்டசபைக்கோ பார்லிமெண்டுக்கோ நின்று உங்களிடம் ஓட்டுக்கு வருபவர்கள் அல்லர். மந்திரிப் (அமைச்சர்) பதவிக்கு ஆசைப்பட்டு காரியம் ஆற்றுபவர்கள் அல்லர்.
மக்கள் மடமையை - அதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபடுபவர்கள்.