5
தோழர்களே! இன்று உலகத்திலேயே மிகக் காட்டுமிராண்டிகளான நிலையில் நாம் இருக்கின்றோம். இல்லை என்று ஒரு மனிதனாலும் கூற முடியாது. இதைப்பற்றி நாம் கவலைப்படுவதும் இல்லை. எப்படி கக்கூஸ் (மலக்கழிவு) எடுப்பவன் அதிலேயே பழகுவதால் அவனுக்கு மலத்தினுடைய நாற்றம் தெரியவில்லையோ அப்படி நாம் காட்டுமிராண்டித்தனத்திலேயே பழகி அதனுடைய இழிவு தெரியாமல் இருக்கிறோம். அதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. - [பெரியார், 11-05-1959]