பள்ளிக் கூடத்துக்கு வருபவனுக்கு அறிவு புகட்ட வேண்டும். கடவுளை வேண்டுமென்பவன் அவனுக்கு அதுபற்றிய அறிவுத் தெளிவு ஏற்பட்டு அதை அவன் ஏற்றுப் பின்பற்றி எடுத்துக் கொள்ளட்டும். அதை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அவன் பள்ளிக்கு வந்து நுழையும்போதே "கடவுள் வணக்கம்" என்றால், "கடவுள்" என்பதை என்னான்னு அவனுக்குத் தெரிந்தா நாம் அதைப் புகுத்துகிறோம்? நாம் பண்ணினா ரகளைக்கு வந்து விடுகிறான். முதலில் ஒருவனுக்குக் கடவுளைச் சொல்லிக் கொடுக்கிறான். அவன் வளர்ந்ததும் அதை அவன் இன்னொருவனுக்கு அப்படியே சொல்லிக் கொடுக்கிறான். எங்கே போய் மாறுதல் அடையும் இது? நமக்கு இதுவே போதுமா? இதுக்கு மேலே வளரவேண்டாமோ?
-[பெரியார் , 05.03.1969]