பசிவாரம், பஞ்சம் என்று உங்கள் காதுக்கு இனிமையாகக் கூறி, உண்டிப் பிச்சை எடுத்து, அதை எலெக்க்ஷன் (தேர்தல்) வாணம் விட்டு, உங்களையெல்லாம் புளுகி ஏமாற்றுகிறான். நீங்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? இவன்கள் (தி.மு.க) போய் என்ன சாதிக்க முடியும்?
இந்தக் கண்ணீர்த் துளி உங்களிடம் வந்து நாங்களும் திராவிடர் கழகத்தினர்தான்; முன்னேற்றம் அவ்வளவுதான் என்கிறார்களே! என்ன முன்னேற்றம்? நான் பார்ப்பானைச் சேர்க்கக் கூடாது என்றால் நீ அவனை உன் கட்சியில் சேர்த்துக் கொண்டாய்! தேர்தல் கூடாது என்று நான் கூறினால் நீ சட்டசபைக்கு நிற்கிறாய். இது சுதந்திரம் அல்ல, நடப்பது ஜனநாயகம் இல்லை என்று கூறினால் நீ இல்லை இது ஜனநாயகம்தான் என்று கூறி ஓட்டு கேட்கிறாய்? இதுதானா முன்னேற்றம்? கேவலம் சட்டசபைப் பதவிக்காக அண்ணாத்துரை 'முதலியார்' என்ற சாதியைப் போட்டுக் கொள்கிறாயே, இதற்குப் பெயர் முன்னேற்றமா?
-[பெரியார், 15-10-1959]
இந்தக் கண்ணீர்த்துளிக்குத்தான் (தி.மு.க) என்ன கொள்கை இருக்கின்றது? பொறுக்கித் தின்பதுதானே கொள்கை.
-[பெரியார்,16.07.1961]