85

"அரசன் ஏன்?
உயர்ந்த ஜாதி ஏன்?
தாழ்ந்த ஜாதி ஏன்?
கடவுள் ஏன்?
மதம் ஏன்?
என்று சொல்லுவது போலவே,

இப்போது
பணக்காரன் ஏன்?
பிரபு ஏன்?
முதலாளி ஏன்?
ஏழை ஏன்?
அடிமை ஏன்?
என்று கேட்கிறோம்.
இந்தப்படி ஏன் கேட்கிறோம்?

முதல் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலடையத் துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு, காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும் அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தாமாகவே கொண்டு போகின்றன."

- பெரியார்

சிறுகுறிப்பு : {மேற்கோள் காட்டப்பட்டுள்ள சிந்தனை 13.06.1949 ஆம் நாள் 'விடுதலை'யில் வெளிவந்த கட்டுரை. 'புரட்சி' என்ற பெயரில் சிறு நூலாக 1962-இல் வெளியிடப்பட்டது. இந்நூல் முழுவதையும் வாசிக்க :