10

ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே, பெண்களை அடிமையாக்கவும், அடங்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும்.
காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டதால், அது எப்படி இழுத்துக் கொண்டு ஓடாமல் எதிர்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோலப் பெண்கள் காதில் மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்துக் கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்குக் காது போய்விடுமோ என்று தலை குனிந்து முதுகை அடிக்கக் காட்டத் தயாராயிருப்பதற்காகவே அது உதவுகிறது. அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்குத் தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனித்துப் போக மாட்டார்கள். நகை போய்விடும் என்று வீட்டோடு
காத்துக் கிடப்பார்கள்.

அதபோலவே கைகளிலும் பூட்டிவிட்டால் விலங்கு போட்டது போல் அடங்கிக் கிடப்பார்கள். விரைவாக நடக்க மாட்டார்கள். அதிலும் 16,18... மேலும் பார்க்க-முழச் சேலையைச் சுற்றிவிட்டால், இன்னமும் தொல்லையாய் நடக்க முடியாமல் "அன்ன நடை" நடந்து கொண்டு அடங்கிக் கிடப்பார்கள் என்கிற எண்ணமேயாகும்.
இந்தக் காரியம் இப்போது பெண்களுக்கே ஆசையாகித் தாங்களாகவே தொழுவில் மாட்டிக் கொள்வது போல மாட்டிக் கொண்டு இந்தக் காரியத்திற்காகப் புருஷனுக்கு நன்றியும் காட்டுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் இதில்
செலவழிக்கும் பணமானது வீண் தேக்கமான பணம் என்றே வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.

பெண்கள் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தையும் கவலையும் செலுத்துவதோடு பணச் செலவும் செய்கிறார்கள். எதற்காக இப்படிச் செய்து
கொள்ள வேண்டும். இது ஒரு அடிமை மனப்பான்மையல்லவா?