முதல் தடவை என்னை மரியாதையாக விட்டார்கள். தீர்ப்பு எழுதும்போது "இந்தமனிதன் கிழவன் ஆனதால் இவனை ஜெயிலுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை.அவனுக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டால் போதும்" என்று கருதி ஜெயிலுக்கு (நீதிபதிகள்) அனுப்பாமல் விட்டு விட்டார்கள்.
ஆனால் நாளைக்கு அந்த அபராதம் போட்டும் எச்சரிக்கை செய்தும் விட்ட ஜட்ஜ் அவர்கள் இப்படிச் சொல்ல முடியாது. கேட்பார்களே நாலுபேர்! "இவன் நாளையோ, நாளை மறுதினமோ செத்துவிடுவான்" என்றாலும், நாளைக்கு விட்டு வைத்தால் இப்படித்தானே பேசுவான்? ஆகையால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று தானே கருதி தண்டிப்பார்?
ஆகையால் முன்னையைவிட இப்போது கொஞ்சம் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பேசுகிறேன். எனக்குத் தண்டனை அனுபவிக்க ஆசை இல்லை.எனக்கு இனிமேல் தண்டனையினால் பெருமையோ பதவியோ பெருந்தன்மையோ வேண்டியதில்லை. ஆனால் இந்த அக்கிரமத்தைத் தடுக்க வேறு மார்க்கம் (வழிமுறை) இல்லையே! ஆகையால் இந்தக் காரியத்தில் மன வேதனையோடு பிரவேசிக்கிறேன்; எப்படியோ வாய்ப்பு வாய்க்கட்டும்.
- [ பெரியார், 30.10.1960, சென்னை -திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த சொற்பொழிவு.