22
உலகத்திலேயே ஓர் அருமையான நல்லநாடு நம்முடைய தமிழ்நாடு. ஏராளமான வசதிகள் படைத்த நாடு. ஏன் இந்தக் காலிப்பசங்கள், சோம்பேறிப் பசங்களிடம் சிக்கிக்கொண்டு நாம் அவஸ்தைப்படும்படி இருக்க வேண்டும்? இதை இந்த அக்கிரமமான ஆதிக்கத்தை ஒழிக்க ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு பாடுபட முன்வர வேண்டும். நான் சாவதற்குள் எப்படியும் இந்த நிலை மாறியே தீரவேண்டும். இந்த உறுதி ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். - [பெரியார் , 20.10.1958]