13

பர்ஷியா என்னும் பராசீகத்தில் இருந்தவர்களே ஆதியில் பெரிதும் ஆரியர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவர்களுக்குள் இருகட்சிகள் இருந்ததாகக்
கூறப்படுகிறது. அதாவது ஒரே இனத்தவர்கள் எனினும் இங்குள்ள சைவர்கள், வைணவர்களைப் போல ஒரு சாரார் தேவர்கள் என்றும், மற்றவர் அசுரர்கள் என்றும்
அழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது, எனினும் சமய துறையில் மாறுபட்டிருந்தனர். தேவர்கள், வானம், தீ முதலிய வானம் பிரகாசம்
என்னும் பொருளைக் கொண்டு தனு என்ற தத்துவத்தின் மீது வழிபாடு கொண்டிருந்தனர். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட இயற்கை தத்துவத்தைக் கொண்டிருந்தனர். அசுர தத்துவம் என்பதாக இதைக் கூறினர். தேவர்களை வென்று
அங்கிருந்து விரட்டியடிக்க, மது, புலால், ஒழுக்கக் குறைவு, கொலைத் தொழில் முதலியன காரணமாக அசுரர்கள் தேவர்களை வெறுத்து விரட்டினர்.

விரட்டப்பட்டு ஓடியவர்கள், விரட்டியவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டு வெளியேறி, பல நாடுகளைச்
சுற்றிவிட்டு, இறுதியாக இந்தியா சிந்து நதிக்கரை வந்தடைந்து சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தம்மை விரட்டியவர்களை மேலும் தொடர்ந்து வசை
பாடலாயினர். இந்தியாவிலும் அவர்கள் கண்ட மனிதர்கள் அவர்களது நாட்டு "அசுரர்"களைப் போலவே உயர்ந்த தத்துவத்தினராக இருந்து இவர்களை வெறுக்கவே அவர்களையும் வைதது போல சபிக்கும் காரியத்தை இவர்கள் மீதும் செய்து வருகின்றனர். அந்த வசவே வேதமாயிற்று.