எவ்விதத்தில் வட நாட்டான் நம்மைவிட உயர்ந்தவன்? எதற்காக வடவனோடு நாம் வாழவேண்டும்? வடநாட்டில் இருந்து என்ன வந்து நம்மைக் காப்பாற்றுகிறது?
என்ன சாதனம் அவனால் ஏற்பட்டுள்ளது? வடநாட்டான் மார்வாடி எல்லாம் இங்கேவந்து சுரண்டிப் பிழைக்கிறானே ஒழிய அவனோடு இருப்பதால் நமக்கு என்ன இலாபம்?
நாம் இன்று வெளிநாட்டுக்குப் போய்ப் பிழைக்க முடியாது. அங்கே போனால் உதைக்கிறான். வெள்ளைக்காரன் நாடாக இருந்த போது இந்தத் தொல்லை கிடையாது.தொலைந்து போகட்டும். நம் வீட்டில் இருந்து பிழைக்கலாம் என்றால் நம் வீட்டுக் கதவையும் பிடுங்கிக் கொண்டு போய்விட்டானே? கண்ட நாயும் இங்கே வந்து பிழைக்கிறது? நமக்குப் பிழைப்பில்லை; காரணம் கேட்டால் நாமெல்லாம் பாரதமாதா புத்திரர்கள்! நமக்குள் பிரிவினை கூடாது என்கிறான்.
நல்ல வருமானம் வரும் எல்லா டிபார்ட்மெண்ட்டையும் (துறைகள்) அவன் எடுத்துக் கொண்டான். என்னடா செலவு என்றால் ரூ.200-கோடி பட்டாளத்திற்கு என்கிறான். எங்களுக்கு எதற்கு இவ்வளவு பட்டாளச் செலவு? எங்களுக்கு யார் எதிரி? அங்கே பாக்கிஸ்தான் முஸ்லிம் உன்னை உதைக்கிறான் என்பதற்காக எங்களிடம் வரி போட்டு அங்கே உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய். இதற்குநாங்கள் ஏன் சம்மதிக்க வேண்டும்?
- [22.09.1958 அன்று வாலஜாபேட்டை (ஆர்காடு) பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு]