"வெள்ளையன் ஒழிந்தது போல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா, இந்நாட்டை விட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின்,
எதற்காக ஒரு "இமயமலைப் பார்ப்பான்" – ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள்
இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ்
நாட்டில்....
எதற்காக இந்நாட்டை வட நாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்து விட்டு, இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக் கூடாதா?"
-[பெரியார் - "விடுதலை', 19.10.1948]