92

திருமணம் புரிந்தவுடன் சுமார் அய்ந்து வருடங்கள் வரை குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி இருந்தால்தான் தேகம் சுகமாக இருக்கும். சிலர் திருமணம் முடிந்தவுடன் அய்ப்பசியில் திருமணமானால் மறு புரட்டாசியில் குழந்தை பிறந்துவிடுகிறது. பிறகு மனைவி குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதா? கணவன்தான் ஆகட்டும் மனைவியிடம் கொஞ்சுவானா? குழந்தையிடமா?