55

இப்போது தமிழன்
தன்னை இந்தியன் என்பதையும்,
இந்து என்பதையும்,
மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும்,
கூட்டுகளிலிருந்தும்
விடுபட்டு விலகுவதாலேயே
தன்னை ஒரு மனிதன் என்றும்,
ஞானத்துக்கும், வீரத்துக்கும்,
பகுத்தறிவுக்கும், மானத்துக்கும்
உரிமை உடையவன் என்றும்,
இவைகளுக்கு ஒரு காலத்தில்
உறைவிடமாக இருந்தவன் என்றும்
உணருவானாவான்.

இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு
விரோதமாகக் காணப்படுவதில்
ஆச்சரியமில்லை.
அவர்களது கூலிகளில் பலர்
இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல்
நடிப்பதில் அதிசயமில்லை.
ஆனாலும், அதைப்பற்றி
நாம் கவலைப்பட வேண்டியதில்லை.


-[பெரியார், "திராவிடர் ஆரியர் உண்மை" என்ற நூலில் இருந்து,பக்கம்:6