65

சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு
இருப்பது தான் சுயமரியாதைக் கட்சியின் லட்சியமா? - என்று யோசித்துப்பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாக பார்ப்பானை ஏற்றி வைப்பதும்,பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒருநாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநலமரியாதையேயாகும் - [பெரியார், 13.06.1949]